தேர்வர்களின் நலன் கருதி மார்ச் / ஏப்ரல் 2020
பொருள் : அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 – மார்ச் /
ஏப்ரல் 2020, இடைநிலை / மேல்நிலை முதலாமாண்டு
மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் – தேர்வு
நேரத்தினை 3 மணி நேரமாக அதிகரித்தல் குறித்த
செய்திகுறிப்பு வெளியிடக்கோருதல் – சார்பு.
வருகிற மார்ச் / ஏப்ரல் 2020 இடைநிலை / மேல்நிலை முதலாமாண்டு மற்றும்
இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகளுக்கான தேர்வு நேரம் 2 1/2 மணி நேரத்திலிருந்து 3
மணி நேரமாக அதிகரித்தல் குறித்த செய்திகுறிப்பு இத்துடன்
இணைத்தனுப்பப்படுகிறது.
இச்செய்திக்குறிப்பினை மாணாக்கர் / தேர்வர் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி
தங்கள் நாளிதழில் / தொலைக்காட்சியில் / வானொலியில் செய்தியாக வெளியிடும்படி
கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அரசுத் தேர்வுகள் இயக்ககம் சென்னை -600 006,
மார்ச் / ஏப்ரல் 2020 இடைநிலை / மேல்நிலை முதலாமாண்டு மற்றும்
இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக்கால நேரம் மாற்றம்
குறித்த செய்திக்குறிப்பு
நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2020 இடைநிலை / மேல்நிலை முதலாம்
ஆண்டு மற்றும் இரணடாம் ஆண்டு பொதுத்தேர்வுகளுக்கு ஏற்கனவே
வெளியிடப்பட்ட கால அட்டவணையில் தேர்வுக்கால நேரம் 2 1/2 மணி நேரம் என
அறிவிக்கப்பட்டிருந்தது.
தேர்வு எழுதும் நேரத்தினை 2 1/2 மணி நேரத்திலிருந்து 3.00 மணி நேரமாக
அதிகரிக்கக் கோரி தேர்வர்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டதைத்
தொடர்ந்தும் மற்றும் புதிய பாடத்திட்டத்தில் தேர்வெழுத வேண்டியுள்ளதாலும்
தேர்வர்களின் நலன் கருதி மார்ச் / ஏப்ரல் 2020 இடைநிலை, மேல்நிலை
முதலாமாண்டு / இரண்டாமாண்டு தேர்வுகளுக்கு தேர்வு எழுதும் நேரம் 3.00
மணி நேரமாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. மேலும், பழைய
பாடத்திட்டத்தில் தேர்வெழுதும் தேர்வர்களுக்கும் தேர்வெழுதும் நேரம் 3.00
மணிநேரம் எனவும் அறிவிக்கப்படுகிறது.
Reading of Question paper | 10.00 AM to 10.10.AM | 10 Minutes |
Verification of Particulars by the Candidates | 10.10.AM to 10.15 AM | 5 Minutes |
Duration of Examination | 10.15 AM to 1.15 PM | 3 Hours |