Tamil Nadu NMMS 2025 Registration Till 29 January, Question Papers

The Directorate of Government Examinations, Tamil Nadu, has Released a notification for the National Merit Means and Skilled Worker Scholarship (NMMS) Examination in February 2025. According to the Official Notification, the TN NMMS District Level Exam will be held on 22 February 2025. The applications are accepted from 31 December 2024. 

TN NMMS 2025 Last Date Extended Till 29th Jan

The National Merit and Merit Scholarship Scheme (NMMS) Examination for the year 2024-2025 will be held on 22.02.2025 (Saturday). The last date for online submission of details of the students applying for this examination and payment of the fee has been informed as 25.01.2025. It is hereby informed that in the interest of the students, the deadline for online submission of applications for this examination has been extended up to 6.00 PM on 29.01.2025.

மேற்காண் விவரத்தினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது . மேலும் , மேற்குறிப்பிட்டுள்ள தேதிக்குப் பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு, பிப்ரவரி 2025

2024-2025 தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை (NMMS) தேர்வு 22.02.2025 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள், சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் இணையதளம் வாயிலாக விண்ணப்பப் படிவங்களை 31.12.2024 முதல் 24.01.2025 -க்குள் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர்களிடம் 24.01.2025 -க்குள் ஒப்படைக்க வேண்டும் என தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள.

மேலும், இத்துடன் இணைத்தனுப்பப்படும் அறிவிப்பினையும் அனைத்து அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Instructions

NMMSதேர்வில் 2024-2025 கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர் கலந்து கொள்ளலாம்.

உதவித் தொகை:

தேர்வில் வெற்றி பெறும் மாணவ /மாணவியருக்கு 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் (+2) வகுப்பு வரை ஆண்டிற்கு ரூ.12000/- உதவித்தொகை வழங்கப்படும்.

தகுதி

அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் இக்கல்வி ஆண்டில் 8 ஆம் வகுப்பு பயில வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3,50,000/- ற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் / பெற்றோர்களுக்கு கீழ்க்காணும் விதிமுறைகளை அறிவுறுத்துமாறு பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இத்தேர்வில் பங்கு பெற மாணவ /மாணவிகள் தாம் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரை அணுகி விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்.
NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமது பெயர் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் எவ்வாறு வர வேண்டுமோ அதன்படி விண்ணப்பத்தை பூர்த்தி செய்தல் வேண்டும்.
மாணவரின் பெற்றோர் பயன்படுத்தும் நடைமுறையில் உள்ள கைபேசி எண்ணையே அளிக்க வேண்டும். உதவித் தொகை சார்ந்து அவ்வப்போது குறுஞ்செய்தி அல்லது கடவுச்சொல் (OTP), குறிப்பிடப்படும் கைப்பேசி எண்ணிற்கே அனுப்பப்படும் என்பதால் அக்கைப்பேசி எண்ணை குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு மாற்றாமல் இருக்கவேண்டும்.

மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளி அமைந்திருக்கும் மாவட்டத்தையே குறிப்பிட வேண்டும். தாங்கள் குடியிருக்கும் மாவட்டத்தைக் குறிப்பிடக் கூடாது.

ஆன்லைன் கட்டணம்:

ரூ.50/- (ரூபாய் ஐம்பது மட்டும்) விண்ணப்பப் படிவத்துடன் பணமாக பள்ளியின் தலைமையாசிரியரிடம் செலுத்த வேண்டும்.

தேர்வு முறை:

இத்தேர்வு இரண்டு பகுதிகளைக் கொண்டது.
பகுதி 1- மனத்திறன் தேர்வு (Mental Ability Test) (MAT)
பகுதி II- படிப்பறிவுத் தேர்வு (Scholastic Aptitude Test) (SAT)

பாடத்திட்டம்

படிப்புதவித் தேர்வு பகுதி | மற்றும் II-னைப் பொறுத்தமட்டில் ஏழாம் வகுப்பிற்குரிய முழுப்பாடமும், எட்டாம் வகுப்பு முதல் மற்றும் இரண்டாம் பருவத்திற்கான பாடப்பகுதி முழுவதும் பயில வேண்டும். இப்பகுதியில் கணிதம் 20, அறிவியல் 35, சமூக அறிவியல் 35 என 90 வினாக்கள் கேட்கப்படும்.

மனத்திறன் தேர்வைப் பொறுத்த மட்டில் பாடப்பகுதி நிர்ணயமில்லை. இப்பகுதியில் 90 கேள்விகள் கேட்கப்படும்

NMMS DGE Notification -2024-25Click Here
NMMS Application Form 2024-25Click Here
NMMSS ELIGIBILITY CRITERIA, SYLLABUS AND METHOD OF SELECTIONClick Here

 

NMMS Exam Question Paper  MAT Original Question Paper 2024 – Download 

NMMS Exam Question Paper SAT Original Question Paper 2024 – Download

NMMS SAT  Question Paper  2022-2023 Pdf – Download 

MMS MAT Question Paper 2022-23 Pdf – Download 

Contents
For More Educational News Updates on Sarkari NaukriSarkari Result, and Employment News Notification. Join us on Twitter | Join Our WhatsApp Groups | Connect with our Telegram Channel

Schools 360

Content Writer

Schools360 Helpline Online
Hello, How can I help you? ...
Click Here to start the chat...