TN Class 1 to 5 Second Semester Examinations for the academic year 2023-2024: ொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் இணைச் செயல்முறைகள். சென்னை-6. நாள்: .12.2023. ந.க எண். 2411 / எப் 2/2021 பொருள் : 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான தேர்வு நடத்துதல் சார்ந்த அறிவுரைகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்தல் -தொடர்பாக.
பார்வை :
- 2023-24 கல்வியாண்டு நாட்காட்டி-பள்ளிக் கல்வித்துறை
- எண்ணும் எழுத்தும் சார்ந்த உயர் அலுவலர்கள் கூட்டம் நாள் 06.12.2023.
பார்வை-1ல் காணும் நாட்காட்டியின் படி 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான தேர்வு நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. 1 முதல் 5-ஆம் வகுப்பு தேர்விற்கான வினாத்தாட்கள் PDF வடிவில் https://exam.tnschools.gov.in என்ற இனைய முகவரியில் பதிவிறக்கம் செய்யத் தக்க வகையில் வழங்கப்படும். இணைப்பிலுள்ள வழிகாட்டு நெறிமுறையின்படி வினாத்தாளினை பதிவிறக்கம் செய்து கீழ்காணும் அட்டவணையின்படி நடத்திட அறிவுறுத்தப்படுகிறது. 1 முதல் 3-ஆம் வகுப்பிற்கான தேர்வுக் கால அட்டவணை.
TN 2nd Term Exam Time Table 2023 for Class 1 to 3
பாடம் | தேர்வு நாள் மற்றும் நேரம்
முற்பகல் 10:30 to 12:30 |
வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் மற்றும் நேரம் |
மொழிப்பாடம் | 15.12.2023 | 14.12.2023, 2.00 pm |
ஆங்கிலம் | 19.12.2023 | 18.12.2023, 2.00 pm |
கணிதம் | 21.12.2023 | 20.12.2023, 2.00 pm |
TN 2nd Term Exam 4th & 5th Std Time Table 2023
Subject | தேர்வு நாள் மற்றும் நேரம் முற்பகல் 10:30 to 12:30 |
வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் மற்றும் நேரம் |
மொழிப்பாடம் | 12.12.2023 |
11.12.2023, 2.00 pm
|
ஆங்கிலம் | 14.12.2023 |
13.12.2023 2.00 pm
|
கணிதம் | 18.12.2023 |
15.12.2023, 2.00 pm
|
அறிவியல் | 20.12.2023 |
19.12.2023, 2.00pm
|
சமூக அறிவியல் | 22.12.2023 |
21.12.2023.2.00 pm
|
4 மற்றும் 5-ஆம் வகுப்பிற்கான தேர்வுக் கால அட்டவணை
1 முதல் 5-ஆம் வகுப்பிற்கு பதிவிறக்கம் செய்த வினாத்தாட்களில் அப்பள்ளியின் Udise code water mark வினாத்தாளில் தெரியும். அவ்வாறு பதிவிறக்கம் செய்த வினாத்தாட்களை ஆசிரியர்கள் தங்கள் வகுப்பில் உள்ள மாணவர்களின் தற்போதைய கற்றல் நிலைக்கேற்ப போதிய அளவில் நகல் எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக
3ஆம் வகுப்பில் 10 மாணவர்கள் அரும்பு நிலையிலும், 10 மாணவர்கள் மொட்டு நிலையிலும், 10 மாணவர்கள் மலர் நிலையிலும் இருப்பின் தலைமை ஆசிரியர்கள் ஒவ்வொரு நிலைக்கான வினாத்தாட்களை எண்ணிக்கைக்கு ஏற்ப நகல் எடுத்து தங்களது கட்டுப்பாட்டில் மந்தணத் தன்மையுடன் இரும்பு அலமாரியில் வைத்து மிகவும் பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், தலைமை ஆசிரியர்கள் வினாத்தாட்களை வேறு பள்ளிகளுக்கோ அல்லது எந்தவொரு whatsapp குழுவிலோ பகிரக்கூடாது. மேலும் 1 முதல் 5-ஆம் வகுப்பிற்கு நடத்தப்படும் தேர்விற்கான விடைத்தாட்களை திருத்தம் செய்து பதிவேட்டில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
எனவே, அனைத்துப் பள்ளிகளிலும் மேற்காண் நடைமுறைகளை பின்பற்றி 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை யிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான தேர்வினை நடத்திட பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக அறிவுறுத்துமாறு
TN Term-2 Summative Assessment Conducting Guidelines: District Primary Education Officers are informed to Conduct Summative Assessment Exams for Class 1 to 3rd from 13th to 23rd December 2022: 1 முதல் 3 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தொகுத்தறி மதிப்பீடு நடத்துதல் சார்ந்த அறிவுரைகளை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்தல் – தொடர்பாக. பார்வை : எண்ணும் எழுத்தும் சார்ந்த வார ஆய்வு கூட்டம்- 03.12.2022
1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான தமிழ் , ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கான தொகுத்தறி மதிப்பீடு 13.12.22 முதல் 23.12.22 வரை முதல் பருவத்தில் நடத்தப்பட்டது போலவே நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
மே தொகுத்தறி மதிப்பீடு எழுத்துப்பூர்வமாகவும் நடத்தப்பட வேண்டும் என்று ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் PDF வடிவிலான தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாட்கள் ( தமிழ் , ஆங்கிலம் மற்றும் கணிதம் ) ஆசிரியர்களின் எண்ணும் எழுத்தும் செயலியிலேயே பதிவிறக்கம் செய்யத்தக்க வகையில் வழங்கப்படும்.
Date | Subject |
21st December 2022 | Tamil |
22nd December 2022 | English |
23rd December 2022 | Maths |
செயலி வாயிலாக மாணவர்களுக்கு மதிப்பீடு முடித்தப்பிறகு கடைசி மூன்று தினங்களான 21 , 22 மற்றும் 23.12.2022 தேதிகளில் முறையே தமிழ் , ஆங்கிலம் கணிதம் பாடங்களுக்கான தொகுத்தறி மதிப்பீட்டினை நடத்திக்கொள்ளலாம் . இந்த PDF வடிவத்தில் வழங்கப்படும் தொகுத்தறி வினாவினை தவிர ஆசிரியர் விரும்பும் வகையில் தொகுத்தறி வினாத்தாளை வடிவமைத்து அதன் விளைவுகளை விருப்பத்தின் அடிப்படையிலும் மதிப்பீடு செய்து கொள்ளலாம் . இவ்வாறு நடத்தப்படும் எழுத்துப்பூர்வமான மதிப்பீடு முற்றிலும் விருப்பத்தின் அடிப்படையிலானது ( Only Optional ) மட்டுமே . இம்மதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் எண்ணும் எழுத்தும் செயலியில் பதிவேற்றம் செய்யத்தேவையில்லை.
எனவே இரண்டாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீட்டினை 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நடத்திட பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மாவட்டத் அனைத்துப் பள்ளிகளிலும்.
தொடக்கக் கல்வி அலுவலர்கள் வாயிலாக அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.