Directorate of Government Examinations, Chennai, Tamil Nadu has released Notification for Rural Aptitude Test (Trust Examination) 2025-2026 Academic Year. It has issued instructions for downloading and uploading examination applications.
Tamil Nadu Rural Students Talent Search Exam (TRUST) for the academic year 2025-26 will be conducted on November 29, 2025 (Saturday).
The Government Examination Department is conducting the “Rural Aptitude Test” for students from rural areas of Tamil Nadu every year since 1991-92, is open to students studying in Class IX in government-recognised schools located in rural Gram Panchayat and towns of Tamil Nadu, excluding Chennai district.
50 boys and 50 girls from each educational district will be selected based on their performance in the test. Selected students will receive a scholarship of ₹1,000 per year for four years to support their continuing education.
Eligibility
Students studying in 9th standard in the 2025-2026 academic year in schools recognized by the Rural Panchayat and Township Governments are eligible to write this aptitude test. Students studying in Municipal and Corporation areas are not eligible to apply for this test.
Annual Income
The parents’ annual income of the students who wish to apply for this examination should not exceed Rs. 1,00,000/- (Rupees One Lakh).
Examination Fee
A cash examination fee of Rs. 10 should be collected from each student applying for the Rural Aptitude Test.
Downloading process of Applications
The school principals should download the blank applications for the Rural Aptitude Test to be held on 29.11.2025 from 28.10.2025 to 04.11.2025 through the website of the Directorate of Government Examinations www.dge.tn.gov.in and provide the downloaded blank applications to the students who wish to appear for the examination and collect them by 04.11.2025 along with the completed application along with the income certificate.
Uploading of Applications
The applications received from the candidates should be uploaded online from 29.10.2025 to 05.11.2025 by visiting the official website www.dge.tn.gov.in using the USER ID and Password provided to their school. Since registration is not possible after the above date, candidates should register by 05.11.2025 so that they are not affected. After the Headmaster confirms that all the details have been uploaded correctly as per the applications received, the candidates are informed to pay the examination fee through the website. After paying the examination fee, students can correct their details.
Download Proceeding Copy – Click Here
பொருள்: அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை 6. தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (Trust Examination) 2025-2026- ஆம் கல்வியாண்டிற்கான தேர்வு விண்ணப்பங்கள் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் செய்தல் அறிவுரை வழங்குதல் – தொடர்பாக.
பார்வை: 1. அரசாணை நிலை எண்.960 கல்வித் துறை (இ2) நாள் 11.10.91 2 அரசாணை நிலை எண். 256, பள்ளிக் கல்வித் துறை (இ2) நாள் 22.12.08.
அரசுத் தேர்வுத் துறையால் ஆண்டு தோறும் தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான ஊரகத் திறனாய்வு தேர்வு பார்வை 1-ல் கண்ட அரசாணையின் படி நடைபெற்று வருகிறது.
தகுதியான தேர்வர்கள்
இத்தேர்விற்கு ஊரகப் பகுதியில் அதாவது கிராமப்புற பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2025-2026-ஆம் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்கள் இத்திறனாய்வு தேர்வு எழுதுவதற்கு தகுதி உடையவராவார்கள். நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க இயலாது.
ஆண்டு வருமானம்
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ மாணவியரின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000/- க்கு (ரூபாய் ஒரு இலட்சத்திற்கு) மிகாமல் இருத்தல் வேண்டும். (அரசாணை நகல் இணைக்கப்பட்டுள்ளது)
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தல்
29.11.2025 அன்று நடைபெறவுள்ள ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கான வெற்று விண்ணப்பங்கைைள 28.10.2025 முதல் 04.11.2025 வரை www.dge.tn.gov.in என்ற அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளம் மூலம் பள்ளித் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து, அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட வெற்று விண்ணப்பங்களை தேர்வெழுத விருப்பமுள்ள மாணவர்களுக்கு வழங்கி பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வருவாய்ச் சான்றினையும் இணைத்து 04.11.2025-க்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்.
தேர்வுக் கட்டண
ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர் ஒவ்வொருவரிடமிருந்தும் தேர்வுக் கட்டணமாக ரூ.10-ஐ பணமாகப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்தல்
தேர்வர்களிடமிருந்து பூர்த்தி செய்து பெறப்பட்ட அவ்விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இவ்வலுவலக இணையதளத்தில் சென்று தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்ட USER ID, Password மூலம் தலைமை ஆசிரியர் தேர்வர்களின் அனைத்து விண்ணப்பங்கைைளயும் 29.10.2025 முதல் 05.11.2025 வரை Online மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேற்படி தேதிக்கு பிறகு பதிவு செய்வது இயலாது என்பதால் தேர்வர்கள் பாதிக்கப்படா வண்ணம் 05.11.2025 க்குள் பதிவு செய்ய வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்களில் உள்ளவாறு அனைத்து விவரங்களும் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை தலைமையாசிரியர் உறுதி செய்த பிறகு இணையதளம் மூலம் தேர்வுக்கட்டணத்தை செலுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது. தேர்வு கட்டணம் செலுத்திய பிறகு மாணவர்களின் விவரங்களை திருத்தம் மேற்கொள்ள இயலாது என்ற விவரத்தினை பள்ளித் தலைமையாசிரியரிடம் அறிவுறுத்த வேண்டும். தேர்வு கட்டணம் செலுத்திய பிறகு Summary Report, பள்ளியில் பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் (தேர்வர்களின் விவரங்களுடன்) முதன்மைக் கல்வி அலுவலரிடம் 05.11.2025- க்குள் ஒப்படைத்திட பள்ளித் தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்த வேண்டும்.
தகுதியான பள்ளிகளைஅனுமதித்தல்
முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையாசிரியரால் பதிவு செய்த விவரத்தினைப் பெற்று பெற்றோர்களின் ஆண்டு வருவாய் சான்றிதழினை ஆய்வு செய்து ரூ.1,00,000/-க்குள் வருமானம் உள்ள பெற்றோரின் குழந்தைகளுக்கு மட்டும் விண்ணப்பிக்க அறிவுறுத்த வேண்டும். மேலும் அப்பள்ளிகள் ஊரகப் பகுதியைச் சார்ந்ததுதானா என்பதனை உறுதிசெய்து கொள்ள வேண்டும். தேர்வுக்கு அரசாணை எண். 960 Education (E2) Department நாள் பத்தி எண் 4-ல் குறிப்பிட்டுள்ளவாறு (நகல் இணைக்கப்பட்டுள்ளது) தகுதியுள்ள பள்ளிகளின் பதிவு செய்த மாணவர்களின் விண்ணப்பங்களை முதன்மைக் கல்வி அலுவலரின் பொறுப்பில் வைத்துக் கொண்டு தகுதியற்ற பள்ளிகளிலிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக நீக்கம் செய்ய வேண்டும். அதன் பின்னரே தேர்வு மைய இணைப்புப் பணியினை (mapping work) மேற்கொள்ள வேண்டும்.
இத்தேர்விற்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து தேர்வர்களுக்கு வழங்குதல் மற்றும் பதிவேற்றம் செய்வது குறித்தான விவரங்களை தங்கள் ஆளுகைக்குட்பட்ட ஊரகப் பகுதிகளிலுள்ள அனைத்து மேல்நிலை / இடைநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்காண் அறிவுரைகளை தவறாது பின்பற்றி தேர்வுகளை நடத்துவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.






