TN Term-2 Summative Assessment Conducting Guidelines: District Primary Education Officers are informed to Conduct Summative Assessment Exams for Class 1 to 3rd from 13th to 23rd December 2022: 1 முதல் 3 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தொகுத்தறி மதிப்பீடு நடத்துதல் சார்ந்த அறிவுரைகளை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்தல் – தொடர்பாக. பார்வை : எண்ணும் எழுத்தும் சார்ந்த வார ஆய்வு கூட்டம்- 03.12.2022
1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான தமிழ் , ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கான தொகுத்தறி மதிப்பீடு 13.12.22 முதல் 23.12.22 வரை முதல் பருவத்தில் நடத்தப்பட்டது போலவே நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
மே தொகுத்தறி மதிப்பீடு எழுத்துப்பூர்வமாகவும் நடத்தப்பட வேண்டும் என்று ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் PDF வடிவிலான தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாட்கள் ( தமிழ் , ஆங்கிலம் மற்றும் கணிதம் ) ஆசிரியர்களின் எண்ணும் எழுத்தும் செயலியிலேயே பதிவிறக்கம் செய்யத்தக்க வகையில் வழங்கப்படும்.
Date | Subject |
21st December 2022 | Tamil |
22nd December 2022 | English |
23rd December 2022 | Maths |
செயலி வாயிலாக மாணவர்களுக்கு மதிப்பீடு முடித்தப்பிறகு கடைசி மூன்று தினங்களான 21 , 22 மற்றும் 23.12.2022 தேதிகளில் முறையே தமிழ் , ஆங்கிலம் கணிதம் பாடங்களுக்கான தொகுத்தறி மதிப்பீட்டினை நடத்திக்கொள்ளலாம் . இந்த PDF வடிவத்தில் வழங்கப்படும் தொகுத்தறி வினாவினை தவிர ஆசிரியர் விரும்பும் வகையில் தொகுத்தறி வினாத்தாளை வடிவமைத்து அதன் விளைவுகளை விருப்பத்தின் அடிப்படையிலும் மதிப்பீடு செய்து கொள்ளலாம் . இவ்வாறு நடத்தப்படும் எழுத்துப்பூர்வமான மதிப்பீடு முற்றிலும் விருப்பத்தின் அடிப்படையிலானது ( Only Optional ) மட்டுமே . இம்மதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் எண்ணும் எழுத்தும் செயலியில் பதிவேற்றம் செய்யத்தேவையில்லை.
எனவே இரண்டாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீட்டினை 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நடத்திட பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மாவட்டத் அனைத்துப் பள்ளிகளிலும்.
தொடக்கக் கல்வி அலுவலர்கள் வாயிலாக அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.